இரு அணிகளுக்குமிடையே உள்ள வித்தியாசம்: தோல்வி குறித்து கோலி

பேட்ஸ்மேன்களால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தொடரை இழந்துள்ளதால் என்னுடைய 150 ரன்களுக்கு...
இரு அணிகளுக்குமிடையே உள்ள வித்தியாசம்: தோல்வி குறித்து கோலி

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதனால் அந்த அணி டெஸ்ட் தொடரையும் வென்றுள்ளது.

இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று 151 ரன்களுக்குச் சுருண்டது. தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பரிசளிப்பு விழாவின்போது கூறியதாவது:

ஆடுகளம்  பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அதன் தன்மை எங்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு நன்றாக விளையாடி முன்னிலை பெற்றிருக்கவேண்டும். ஆனால் அப்படி அமையவில்லை.

பேட்ஸ்மேன்களால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தொடரை இழந்துள்ளதால் என்னுடைய 150 ரன்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. டெஸ்டை வெல்லாதபோது தனிப்பட்ட சாதனைகள் அவ்வளவு முக்கியமில்லை. நாங்கள் எங்கள் முயற்சியை வெளிப்படுத்தினோம். ஆனால் அது போதவில்லை. எங்களை விடவும் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாகச் செயல்பட்டது. முக்கியமாக ஃபீல்டிங்கில் என்று பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com