ஐசிசி தரவரிசை: கவாஸ்கருக்கு அடுத்ததாக 900 புள்ளிகள் பெற்று விராட் கோலி சாதனை!

செஞ்சுரியன் டெஸ்ட் சதம் மூலம் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார் கோலி.
ஐசிசி தரவரிசை: கவாஸ்கருக்கு அடுத்ததாக 900 புள்ளிகள் பெற்று விராட் கோலி சாதனை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகள் பெற்ற ஒரே இந்தியர் சுனில் கவாஸ்கர். சச்சின், டிராவிடால் கூட அந்த இலக்கை எட்டமுடியாமல் போனது. இந்நிலையில் கவாஸ்கருக்கு அடுத்ததாக 900 புள்ளிகளைத் தாண்டிய 2-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

கவாஸ்கர் தனது 50-வது டெஸ்டில் 887 புள்ளிகள் முதல் 916 புள்ளிகளுக்குத் தாவினார். சச்சின் 2002-ல் 898 புள்ளிகளும் டிராவிட் 2005-ல் 892 புள்ளிகளும் பெற்றார்கள். அதுவே அவர்கள் எடுத்த உச்சபட்ச டெஸ்ட் தரவரிசைப் புள்ளிகள். இந்நிலையில் செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் சதமெடுத்த கோலி இந்த இலக்கை எட்டியுள்ளார்.

900 புள்ளிகளை அடைந்த 31-வது டெஸ்ட் வீரர் கோலி. இதுவரை டெஸ்ட் தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்றவர் பிராட்மேன். அவர் எடுத்த 961 புள்ளிகளை இதுவரை யாராலும் நெருங்கமுடியவில்லை. சமீபத்தில் ஆஸி. கேப்டன் 947 புள்ளிகள் பெற்றார். 

செஞ்சுரியன் டெஸ்ட் சதம் மூலம் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார் கோலி. முதல் இடத்தில் ஸ்மித் உள்ளார். 

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்தமுறை முதலிடத்தில் இருந்த ரபடா இரண்டாவது இடத்துக்கு இறங்கியுள்ளார். 3-வது ஜடேஜாவும் ஐந்தாவது இடத்தில் அஸ்வினும் உள்ளார்கள்.

ஐசிசி தரவரிசை: பேட்ஸ்மேன்கள்

1. ஸ்டீவ் ஸ்மித்
2. விராட் கோலி
3. ஜோ ரூட்
4. கேன் வில்லியம்சன்
5. டேவிட் வார்னர்

ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்கள்

1. ஜேம்ஸ் ஆண்டர்சன்
2. ரபடா
3. ஜடேஜா
4. ஹேஸில்வுட்
5. அஸ்வின்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com