செய்திகள் சில வரிகளில்...

 பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள இந்தியா, அதில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே அணியையும், நியூஸிலாந்து-கென்யாவையும், தென் ஆப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளையும் புதன்கிழமை வென்றன.
 முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
 ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை வென்றது.
 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில், காயமடைந்துள்ள இஷான் பொரெலுக்கு பதிலாக ஆதித்யா தாக்கரே சேர்க்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com