சிஎஸ்கே அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி: தோனி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி செய்வோம் என தோனி கூறியுள்ளார்...
சிஎஸ்கே அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி: தோனி பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி செய்வோம் என தோனி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தோனி கூறியதாவது:

ஐபிஎல்-லில் 2 வருடங்கள் சென்னை அணி ஆடாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. சென்னை எனது இரண்டாவது தாய் வீடு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 18-20 வீரர்களைச் சேர்க்கவுள்ளோம். உள்ளூர் வீரரான அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம்.

சென்னை மீதான எதிர்பார்ப்பு ஐபிஎல்-லுக்கும் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சென்னை அணிக்காக 2 ஆண்டுகள் விளையாட முடியாமல் போனாலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.

இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, எம்.எஸ்.தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com