ஆஸ்திரேலிய ஓபன்: வாவ்ரிங்கா, முகுருஸா அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு
ஆஸ்திரேலிய ஓபன்: வாவ்ரிங்கா, முகுருஸா அதிர்ச்சித் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ஆவது சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த வாவ்ரிங்காவை 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் உலகின் 97-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்கிரென் வீழ்த்தினார்.
தோல்விக்குப் பிறகு பேசிய வாவ்ரிங்கா, 'இந்தக் களத்தில் இவ்வாறு தோற்றது கடினமாக இருக்கிறது. ஆனால், 5 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், முதல் ஆட்டத்தை விளையாடுவதே பெரிய விஷயமாக இருந்தது. எனினும், தற்போது 2-ஆவது சுற்று வரை வந்து விடை பெறுகிறேன்' என்றார்.
ஜோகோவிச், ஃபெடரர் வெற்றி: இதனிடையே, போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-ஆவது சுற்றில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்சை வீழ்த்தினார். முதல் செட்டை 4-6 என இழந்த ஜோகோவிச், 6-3, 6-1, 6-3 என அடுத்த 3 செட்களை தன் வசமாக்கினார்.
மற்றொரு ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-4, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜேன் லெனார்ட் ஸ்ட்ரஃபை வீழ்த்தினார். 
இதர 2-ஆவது சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-7(6/8), 3-6, 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி அமெரிக்காவின் டெனிஸ் குத்லாவையும், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 6-1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பீட்டர் கோஜோவ்ஸிக்கை வென்றனர்.
முகுருஸா வெளியேற்றம்: மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவை 7-6(7/1), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் தைவானின் சியே சு வெய். அதேபோல் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெர்னார்டா பெரா வீழ்த்தினார்.
மறுபுறம், உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் இயுஜின் பெளசார்டை வென்றார். ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 7-6(7/4) என்ற கணக்கில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
இந்திய வீரர்கள் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்களது 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
2-ஆவது சுற்றுகளில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பூரவ் ராஜா ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாஷிலாஷ்விலி-ஆஸ்திரியாவின் ஆன்ட்ரியா ஹெய்தர் இணையை வென்றது. இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் இணை 6-2, 7-6(7/5) என்ற செட் கணக்கில் கனடாவின் வாசெக் போஸ்பிஸில்-அமெரிக்காவின் ரயான் ஹாரிசன் ஜோடியை வீழ்த்தியது.
இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கி-ருமேனியாவின் மேரியஸ் கோபில் இணையை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com