ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர் இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.
பிரிஸ்பேனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 106 ரன்கள் விளாசினார். உடன் வந்த டேவிட் வார்னர் 35, பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் 36, அலெக்ஸ் காரே 27, கேப்டன் ஸ்மித் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 271 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து 44.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வென்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர்களில் ஒருவரான ஜானி பேர்ஸ்டோவ் 9 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் எடுத்தார்.
உடன் வந்த ஜேசன் ராய் 2 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 57, இயான் மோர்கன் 21, ஜோஸ் பட்லர் 42 ரன்கள் எடுத்தனர். மொயீன் அலி ஒரு ரன்னில் வெளியேறினார். இறுதியாக ஜோ ரூட் 46, கிறிஸ் வோக்ஸ் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4, ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com