கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்.
கோப்பையுடன் நியூஸிலாந்து அணியினர்.

பாகிஸ்தானை 'ஒயிட்வாஷ்' செய்தது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தானை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது நியூஸிலாந்து.
வெலிங்டனில் இரு அணிகளிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 49 ஓவர்களில் 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் அதிகபட்சமாக 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதமடித்தார். அடுத்த படியாக ராஸ் டெய்லர் 59, காலின் மன்ரோ 34, கேப்டன் கேன் வில்லியம்சன் 22 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கிராண்ட்ஹோம் 29, டிம் செளதி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ருமன் ராயீஸ் 3, ஃபஹீம் அஷ்ரஃப் 2, ஆமிர் யாமின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் தடுமாற்றத்துடன் வெளியேற, கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து ஆடினர். தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 12 ரன்களிலும், இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்திலும் வெளியேறினர். மிடில் ஆர்டரில் வந்த ஹரிஸ் சோஹைல் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள் உள்பட 63, தொடர்ந்து வந்த ஷாதாப் கான் 5 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ் தலா 23 ரன்கள் அடிக்க, ஆமிர் யாமின் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் மட் ஹென்றி 4, சேன்ட்னர் 3, ஃபெர்குசன் 2, கிரான்ட்ஹோம் ஒரு விக்கெட் வீழ்த்தினர். கப்டில் ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com