ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
 இதில், ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்று ஒன்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஃபெடரர், போட்டித் தரவரிசையில் 29-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கெட்டை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
 வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "2-ஆவது செட் மிகவும் கடினமாக இருந்தது. அத்துடன் இந்த ஆட்டத்தில் வெற்றி-தோல்வி இருவருக்கும் மிக நெருக்கமாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு கேமிலும் நான் கவனம் செலுத்த வேண்டியிருந்தது' என்றார்.
 ஃபெடரர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிக்ûஸ எதிர்கொள்கிறார். முந்தைய சுற்றில் மார்டன், ஆர்ஜென்டீனாவின் நிகோலஸ் கிக்கரை வீழ்த்தினார்.
 இதனிடையே, போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸை 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார். அப்போது பேசிய ஜோகோவிச், "இந்த ஆட்டத்தை நேர் செட்களில் வென்றிருந்தாலும், அதற்காகப் போராட வேண்டியிருந்தது. தற்போதைய நிலையில் விளையாடும் ஆட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறேன். ஏனெனில், கடந்த 6 மாதங்களாக களம் காணவில்லை என்பதால், அதிக எதிர்பார்ப்புகளுடன் இல்லை' என்றார்.
 ஜோகோவிச் அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சங் ஹியோனுடன் மோதுகிறார். முன்னதாக சங் ஹியோன், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதர ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை வீழ்த்தினார்.
 இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி-பிரான்ஸின் ஜூனியன் பெனட்டியுவையும், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்-ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவையும் சாய்த்தனர்.
 போராடி வென்ற சைமோனா
 மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 4-6, 6-4, 15-13 என்ற செட் கணக்கில் போராடி அமெரிக்காவின் லெளரென் டேவிஸை வீழ்த்தினார். வெற்றிக்குப் பிறகு பேசிய சைமோனா, "இந்த ஆட்டத்தில் கிட்டத்தட்ட நான் உயிரிழந்து மீண்டதாகவே கூறலாம். எனது தசைகள் மிகவும் தளர்ந்துவிட்டன. எனது கணுக்காலை உணர இயலாத அளவில் விளையாடினேன்' என்றார்.
 மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 7-6(8/6), 7-5 என்ற செட் கணக்கில் லூசி சஃபரோவாவை வென்றார்.
 பிரான்ஸின் கரோலின் கார்சியா-பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சையும், ஜப்பானின் நவோமி ஒசாகா-ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டியையும் வீழ்த்தினர்.
 4-ஆவது சுற்றில் பயஸ்-பூரவ் ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பூரவ் ராஜா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த பிரிட்டனின் ஜேமி முர்ரே-பிரேசிலின் புருனோ சோர்ஸ் இணையை 7-6(7/3), 5-7, 7-6(8/6) என்ற செட் கணக்கில் வீழ்த்தியது பயஸ்-பூரவ் இணை.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com