துளிகள்...

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனான டெம்பா பவுமா, மோதிர விரல் எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை.

• தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனான டெம்பா பவுமா, மோதிர விரல் எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை.
• முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
• இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் கெளரவ் கில் 5-ஆவது முறையாக கோப்பை வென்றார்.
• பத்தாவது சென்னை ஓபன் செஸ் போட்டியில் சென்னை வீரர் தீபன் சக்ரவர்த்தி 5-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் டிமுர் கராயேவை வீழ்த்தினார்.
• தெற்கு மண்டல அளவிலான தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம், ஆடவர் பிரிவில் ஆந்திர பிரதேசத்தையும், மகளிர் பிரிவில் கேரளத்தையும் வீழ்த்தி சாம்பியன் ஆனது.
• புரோ மல்யுத்த லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் வீர் மராதாஸ் அணி 5-2 என்ற கணக்கில் டெல்லி சுல்தான்ûஸ வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com