தேசிய கூடைப்பந்து: சண்டீகரை வீழ்த்தியது மேற்கு வங்கம்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் மேற்கு வங்க அணி, சண்டீகர் அணியை வென்றது.
தேசிய கூடைப்பந்து: சண்டீகரை வீழ்த்தியது மேற்கு வங்கம்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் மேற்கு வங்க அணி, சண்டீகர் அணியை வென்றது.
 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் 5-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் 90-62 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டீகரை வென்றது. மேற்கு வங்க கேப்டன் சல்மா தேவி அதிகபட்சமாக 24 புள்ளிகள் வென்றார்.
 மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 75-57 என்ற கணக்கில் அஸ்ஸாமை வென்றது. உத்தரப் பிரதேச அணியில் வைஷ்ணவி யாதவ் 22 புள்ளிகள் கைப்பற்றினார். தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் 37-78 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தது. தில்லி கேப்டன் ராஸ்பிரீத் சிந்து 14 புள்ளிகள் வென்றார். நடப்புச் சாம்பியனான கேரளம் 62-34 என்ற கணக்கில் மத்தியப் பிரதேசத்தை வென்றது. கேரள அணியின் ஜீனா அதிகபட்சமாக 25 புள்ளிகள் பெற்றார்.
 மகாராஷ்டிர அணி 76-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானா அணியை வென்றது. மகாராஷ்டிரத்தின் சுஸானே பின்டோ அதிகபட்சமாக 15 புள்ளிகள் வென்றார். மகளிர் பிரிவில் கர்நாடகம் 83-67 என்ற கணக்கில் தமிழகத்தை வென்றது. அதிகபட்சமாக கர்நாடக கேப்டன் பந்தாவயா 30, தமிழக வீராங்கனை வந்தனா ஆர்யா 12 புள்ளிகள் வென்றனர்.
 ஆடவர் பிரிவு ஆட்டங்களில் கேரளம் 84-66 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தியது. கேரள வீரர்கள் ஜினி பென்னி, ஸ்ரீராக் நாயர் தலா 18 புள்ளிகள் எடுத்தனர். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் 94-65 என்ற கணக்கில் ஹரியாணாவை வென்றது. குஜராத் வீரர் காசி ராஜன் 26 புள்ளிகளை கைப்பற்றினார். மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தானை 77-55 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது உத்தரகண்ட்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com