மும்பை மாரத்தான்: எத்தியோபியர்கள் சாம்பியன்

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.

மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆடவர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் சாம்பியன் ஆகினர்.
 ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார். சகநாட்டவரான ஷுமெட் அகல்னா 2 மணி 10 நிமிடங்களில் வந்து 2-ஆம் இடமும், கென்யாவைச் சேர்ந்த ஜோஷுவா கிப்கோரிர் 2 மணி 10 நிமிடம் 30 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
 மகளிர் பிரிவில் அமானே கொபேனா 2 மணி 25 நிமிடம் 49 நொடிகளில் முதல் வீராங்கனையாக வந்தார். நடப்புச் சாம்பியனான கென்யாவின் போர்னஸ் கிடுர் 2 மணி 28 நிமிடம் 48 நொடிகளில் வந்து 2-ஆம் இடமும், எத்தியோபியாவின் ஷுமோ ஜினிமோ 2 மணி 29 நிமிடம் 41 நொடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தனர்.
 இரு பிரிவுகளிலும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.26 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியின் ஆடவர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்களான கோபி தொனகல், நிதேந்திர சிங் ராவ் ஆகியோர் முறையே 11, 12-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
 இதனிடையே, ஆடவர் அரை மாரத்தான் போட்டியில் இந்தியரான பிரதீப் சிங் ஒரு மணி 5 நிமிடம் 42 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார். சங்கர் மான் தபா, தீபக் கும்பார் முறையே 2 மற்றும் 3-ஆம் இடம் பிடித்தனர். மகளிர் அரை மாரத்தானில் சஞ்சீவனி ஜாவத் 1 மணி 26 நிமிடம் 24 நொடிகளில் வந்து வெற்றி பெற்றார். மோனிகா அதாரே, ஜுமா காடுன் முறையே 2 மற்றும் 3-ஆவதாக வந்தனர்.
 புகார்: இதனிடையே, போட்டி நோக்கம் இல்லாமல் சாதாரணமாக மாரத்தானில் பங்கேற்றவர்களும், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளும் இடையூறுகள் ஏற்படுத்தியதாக மாரத்தான் வீராங்கனைகள் பலர் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com