ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா தோல்வி

நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி போட்டியில், முதல் பகுதியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது

நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி போட்டியில், முதல் பகுதியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.
 தெளரங்கா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியத்துக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியாவின் முதல் ரன்னரான சிங்லென்சனா அருமையாகத் தடுத்தார்.
 அடுத்த நொடிகளில் இந்தியாவின் தில்பிரீத் சிங் பாஸ் செய்த பந்தை, நூலிழையில் கோலாக்கத் தவறினார் லலித் உபாத்யாய். 4-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் டாம் பூன் ஃபீல்டு கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில், 19-ஆவது நிமிடத்தில் ஆட்டத்தை சமன் செய்தது இந்தியா.
 பெல்ஜிய வீரர்களை இடைமறித்து பந்தை பறித்த ரூபிந்தர் பால் சிங், நடுகளத்தில் இருந்த மன்பிரீத்துக்கு பாஸ் செய்தார். அவரிடமிருந்து அதை பெற்ற மன்தீப் சிங் சாதுர்யமாக கோலடித்தார்.
 21-ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் பதிலடி முயற்சியை அற்புதமாகத் தடுத்தார் இந்திய கீப்பர் ஸ்ரீஜேஷ். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் இருந்தது.
 36-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் போக்கார்டின் கோல் முயற்சியை ஸ்ரீஜேஷ் தடுக்க, களத்துக்கு திரும்பி வந்த பந்தை தகுந்த இடைவெளி கண்டு மீண்டும் கோல் போஸ்டுக்குள் அனுப்பினார் சகநாட்டவரான செபாஸ்டியன் டாக்கிர். முன்னிலை பெற்ற பெல்ஜியத்துக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கோல்களாக மாறவிடாமல் தடுத்தார் இந்தியாவின் மன்பிரீத் சிங். எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், இறுதியில் பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com