டி20 கிரிக்கெட் பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.
வெல்லிங்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் ஃபீல்ட் செய்ய தீர்மானித்தது. பேட் செய்த பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தன. பாபர் ஆஸம் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுக்க, அடுத்த படியாக ஹசன் அலி 23 ரன்கள் சேர்த்தார்.
எஞ்சிய வீரர்களில் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது உள்பட 6 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். உமர் அமின், ஷாதாப் கான் டக் அவுட் ஆகினர். நியூஸிலாந்து தரப்பில் சேத் ரேன்ஸ், டிம் செளதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சேன்ட்னர் 2, அனாரு கிட்சன், காலின் மன்ரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் பேட் செய்த நியூஸிலாந்தில் காலின் மன்ரோ-ராஸ் டெய்லர் பார்ட்னர்ஷிப் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. மன்ரோ 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்களும், ராஸ் டெய்லர் 3 பவுண்டரிகள் உள்பட 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக தொடக்க வீரர் கப்டில் 2, அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 3, டாம் புரூஸ் 26 ரன்களில் பெவிலியன் திரும்பியிருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ருமன் ராயீஸ் 2, ஷாதாப் கான் ஒரு விக்கெட் எடுத்தனர். காலின் மன்ரோ ஆட்டநாயகன் ஆனார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com