தேசிய கூடைப்பந்து: மேற்கு வங்கத்தை வீழ்த்தியது தமிழகம்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம், மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம், மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.
சென்னையில் 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆம் நாளான திங்கள்கிழமை மகளிர் பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 84-50 என்ற புள்ளிகள் கணக்கில் மேற்கு வங்கத்தை வென்றது. அதிகபட்சமாக தமிழக தரப்பில் ஸ்ரீவித்யா 17 புள்ளிகளும், மேற்கு வங்கத்தில் சுகுமோனி 10 புள்ளிகளும் வென்றனர். எனினும், மற்றொரு ஆட்டத்தில் தமிழகம் 64-94 என்ற கணக்கில் இந்திய ரயில்வேயிடம் தோற்றது.
இதர ஆட்டங்களில் உத்தரப் பிரதேசம் 69-54 என்ற கணக்கில் தெலங்கானாவையும், நடப்புச் சாம்பியன் கேரளா 63-42 என்ற கணக்கில் தில்லியையும் வீழ்த்தின. எனினும், மற்றொரு ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 63-78 என்ற கணக்கில் கர்நாடகத்திடம் வீழ்ந்தது. சத்தீஸ்கர் 90-61 என்ற கணக்கில் மகாராஷ்டிரத்தை வென்றது.
ஆடவர் பிரிவு ஆட்டங்களில் சண்டீகர் 83-70 என்ற கணக்கில் கேரளத்தை வென்றது. சர்வீசஸ் 87-59 என்ற கணக்கில் குஜராத்தையும், பஞ்சாப் 70-68 என்ற கணக்கில் உத்தரகண்டையும் வீழ்த்தின. இந்திய ரயில்வே 103-79 என்ற கணக்கில் ராஜஸ்தானை பந்தாடியது. இதனிடையே, சர்வீசஸ் அணி மற்றொரு ஆட்டத்திலும் 90-70 என்ற கணக்கில் கர்நாடகத்தை வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com