மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில கைப்பந்துப் போட்டி: தஞ்சை அணி சாம்பியன்

ஈரோட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.
ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில கைப்பந்துப் போட்டியில் முதலிடம் வென்ற தஞ்சை மாவட்ட அணிக்கு சாம்பியன் கேடயத்தை வழங்குகிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 
ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில கைப்பந்துப் போட்டியில் முதலிடம் வென்ற தஞ்சை மாவட்ட அணிக்கு சாம்பியன் கேடயத்தை வழங்குகிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 

ஈரோட்டில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் தஞ்சை அணி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.
தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கத்தின் பார்வையற்றோர் அமைப்பு, பார்வையற்றோர் கைப்பந்துக் குழு, விடியல் மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்துப் போட்டி, ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சனி, ஞாயிறு (ஜனவரி 20, 21) ஆகிய இருநாள்கள் நடைபெற்றன.
போட்டியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தொடக்கி வைத்தார். இப்போட்டியில் ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சை, தேனி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த கைப்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், முதல் இடத்தை தஞ்சை மாவட்ட அணியும், 2-ஆம் இடத்தை விழுப்புரம் மாவட்ட அணியும், 3-ஆம் இடத்தை கடலூர் மாவட்ட அணியும் வென்றனர்.
அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கத்தின் பார்வையற்றோர் அமைப்புத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் துரைராஜ், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.-க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று முதல் இடம் பிடித்த தஞ்சை அணிக்கு கேடயம், பரிசையும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த அணிகளுக்குப் பரிசுகளையும் வழங்கினார். இதில், வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com