ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் மோதவுள்ள நெ.1 & நெ.2 வீராங்கனைகள்!

இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில்...
கரோலின் வோஸ்னியாக்கி
கரோலின் வோஸ்னியாக்கி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் - போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் ஆகியோர் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3 4-6 9-7 என்ற செட் கணக்கில் சைமோனா ஹேலப் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சைமோனா ஹேலப்
சைமோனா ஹேலப்

மற்றொரு அரையிறுதிச் சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி - எலிஸ் மெர்டன்ஸ் ஆகியோர் மோதினார்கள். இதில் 6-3 7-6(2) என்ற நேர் செட்களில் வெற்றியடைந்தார் கரோலின்.

இதையடுத்து, இறுதிச்சுற்றில் சைமோனா ஹேலப் - கரோலின் வோஸ்னியாக்கி ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். இருவருமே இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com