ஐபிஎல் ஏலம்: 2-ஆம் நாள் நேரலைப் பதிவுகள்

அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர்? வாஷிங்டன் சுந்தர் தேர்வான அணி?சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்த இளம் வீரர்? உட்பட இன்றைய ஐபிஎல் வீரர்கள் ஏலம் தொடர்பான நேரலைப் பதிவுகள்...
ஐபிஎல் ஏலம்: 2-ஆம் நாள் நேரலைப் பதிவுகள்

ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்

* கடைசி வீரராக ஜாவோன் சியர்லெஸ் ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* மன்சூர் தாரை ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

* நிதீஷ் எம்.டி தினேசன் ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* துஷ்மந்த்த சமீரா ரூ. 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கடைசி கட்டத்தில் 3-ஆவது முறையாக மீண்டும் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வந்த கிறிஸ் கெயல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

* பவன் தேஷ்பாண்டே ரூ. 20 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஆர்யமான் விக்ரம் பிர்லாவை ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்தது.

* ரூ. 20 லட்சத்துக்கு ஜதின் சக்ஸேனாவை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

* சைதன்யா பிஷானி ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 20 லட்சத்துக்கு மோனு சிங்கை தேர்வு செய்தது.

* சிதீஷ் ஷர்மா ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

* சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி மேஹதி ஹாசனை ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

* ரூ. 20 லட்சத்துக்கு மோஹ்சின் கானை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* ராஜஸ்தான் ராயல் ரூ. 20 லட்சத்துக்கு மஹிபால் லோம்ரோரை தேர்வு செய்தது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு மார்க் வூட்டை ஏலத்தில் எடுத்தது.

* யு-19 உலகக் கோப்பை தொடர் இந்திய அணி வீரர் அங்குல் ராய் ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்தது.

* சேவாக் உறவினர் மயங்க் தாகர் ரூ. 20 லட்சத்துக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 20 லட்சத்துக்கு பிரதீப் சாஹூவை தேர்வு செய்தது.

* அகில தனஞ்செயா ரூ. 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ரூ. 50 லட்சத்துக்கு பென் லாஃப்லினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

* மும்பை இந்தியன்ஸ் அணி மயங்க் மார்கண்டேவை ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

* டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ரூ. 20 லட்சத்துக்கு சயன் கோஷ் தேர்வு செய்யப்பட்டார்.

* பிபுல் ஷர்மா ரூ. 20 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்தது.

* மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு ஆதித்ய தாரேவை வாங்கியது.

* பிரசாந்த் சோப்ரா ரூ. 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ரூ. 20 லட்சத்துக்கு சித்தேஷ் லேட், மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* டிம் சௌத்தியை ரூ. 1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தேர்வு செய்தது.

* மிட்செல் ஜான்சன் ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* மறு ஏலத்துக்கு வந்த பார்த்திவ் படேல் ரூ. 1.7 கோடிக்கு  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ரூ. 1.4 கோடிக்கு நமன் ஓஜாவை வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்.

* சாம் பில்லிங்ஸை ரூ. 1 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

* மறுமுறை ஏலத்துக்கு வந்த முரளி விஜய் ரூ. 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 20 லட்சத்துக்கு மிதுன்.எஸ்-ஐ தேர்வு செய்தது.

* பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு உள்ளூர் வீரரான அனிருதா ஜோஷியை ஏலத்தில் எடுத்துள்ளது.

* த்ரூவ் ஷோரே ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

*  ரூ. 20 லட்சத்துக்கு கனிஷ்க் சேத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஷரத் லம்பாவை ரூ. 20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 50 லட்சத்துக்கு லுங்கி நிகிடியை தேர்வு செய்தது.

17 வயது நேபாள வீரர் சந்தீப் லாமிசஹனே ரூ. 20 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். இவர் நேபாளத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் ஆவார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்கு ஆசிஃப் கே.எம்-ஐ தேர்வு செய்தது.

* பென் ட்வார்ஷுயீஸை ரூ. 1.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.

* ஸ்ரீவத்ஸவ் கோஸ்வாமி ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* அக்ஷதீப் நாத் ரூ. 1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* ராஜஸ்தான் ராயல்ஸ் ஷ்ரேயாஸ் கோபாலை ரூ. 20 லட்சத்துக்கு தேர்வு செய்தது.

* தஹிந்ஜர் தில்லன் ரூ. 55 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கேமரூன் டெல்போர்ட் ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* தீபக் சாஹரை ரூ. 80 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

* தன்மை அகர்வால் ரூ. 20 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஆண்ட்ரூ டை ரூ. 7.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* பில்லி ஸ்டான்லேக்கை ரூ. 50 லட்சத்துக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்தது.

* பரிந்தர் ஸ்ரன் ரூ. 2.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ஜேஸன் பெஃஹ்ரென்தாஃப் ரூ. 1.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* மிட்செல் சான்ட்னர் ரூ. 50 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* கிறிஸ் ஜோர்டனை ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

* மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார் ஜே.பி.டுமினி. ரூ. 1 கோடிக்கு அந்த அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* 19 வயது ஆஃப்கான் வீரர் ஜாகீர் கான் பக்தீன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 60 லட்சத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜகதீசன் நாராயணனை ரூ. 20 லட்சத்துக்கு தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் அறிமுக வீரராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (வயது 22)

* அனுரீத் சிங் ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு பிரதீப் சங்வானை தேர்வு செய்தது.

* ரூ. 55 லட்சத்துக்கு அபிஷேக் ஷர்மா, டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ரூ. 3 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அங்கீத் ஷர்மா அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ரூ. 20 லட்சத்துக்கு சச்சின் பேபியை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்துள்ளது.

* ரிங்கு சிங் ரூ. 80 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* அபூர்வ் வான்கடே அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* 17 வயது ஆஃப்கான் வீரர் முஜீப் சத்ரான் ரூ. 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ரூ. 2.6 கோடிக்கு ஷர்துல் தாக்கூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. மேலும் இதுவரையில் சென்னை அணி தேர்வு செய்த முதல் இளம் வீரர் ஆவார். (வயது 26)

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 2.2 கோடிக்கு டிரென்ட் போல்ட்டை தேர்வு செய்துள்ளது.

* ஜெயதேவ் உனாட்கட் ரூ. 11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரையில் தேர்வான இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட வீரராக உள்ளார்.

* ரூ. 2.2 கோடிக்கு நாதன் கௌடர் நைல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 2.6 கோடிக்கு முகமது சிராஜை ஏலம் எடுத்துள்ளது.

* ரூ. 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வினய் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

* சந்தீப் ஷ்ரமா ரூ. 3 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

* மோஹித் ஷர்மா ரூ. 2.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரைட் டு மேட்ச் அடிப்படையில் தக்க வைக்கப்பட்டார்.

* தாவல் குல்கர்னியை ரூ. 75 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரைட் டு மேட்ச் அடிப்படையில் தக்க வைத்துக்கொண்டது.

* ஜெயந்த் யாதவ் ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு டேனியல் கிறிஸ்டியனை தேர்வு செய்துள்ளது.

* பவன் நேகியை ரூ. 1 கோடிக்கு ரைட் டு மேட்ச் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்தது.

* தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ரூ. 3.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* மனோஜ் திவாரி ரூ. 1 கோடிக்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

* ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ. 1.2 கோடிக்கு மன்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது.

*  சௌரப் திவாரியை ரூ. 80 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

*  மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 3.8 கோடிக்கு இவன் லீவிஸை தேர்வு செய்துள்ளது.

* ரூ. 20 லட்சத்தை அடிப்படை விலையாகக் கொண்ட கே. கௌதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 6.2 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஷாபாஸ் நதீமை ஏலம் எடுத்துள்ளது.

ராஹுல் சாஹர் ரூ. 1.9 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com