பிசிசிஐ vs லோதா: சில பரிந்துரைகளில் திருத்தங்கள் கொண்டுவர உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

லோதா குழு பரிந்துரைகளில் பலவற்றுக்கு பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்...
பிசிசிஐ vs லோதா: சில பரிந்துரைகளில் திருத்தங்கள் கொண்டுவர உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை மறுசீரமைப்பு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். அதைத் தொடர்ந்து லோதா குழு அளித்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதை உடனடியாக அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டது.

லோதா குழு பரிந்துரைகளில் பலவற்றுக்கு பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கொண்ட அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.

2016-ல் வழங்கப்பட்ட தீர்ப்பைத் திரும்பப் பெறமுடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அதில சில திருத்தங்கள் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 

ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை, பிசிசிஐ நிர்வாகிகளின் பதவிகளுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் இடையே இளைப்பாறல் காலம் போன்ற முக்கியமான விஷயங்களில் திருத்தங்கள் கொண்டு வர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே பதவியில் மீண்டும் போட்டியிடும்போதுதான் இளைப்பாறல் காலம் தேவைப்படுகிறது. அதே நபர், வேறு பதவிக்குப் போட்டியிட்டால் இளைப்பாறல் காலம் தேவையில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும் இதுகுறித்த இறுதி உத்தரவுகள் வெளியாகும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல்களை நடத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ vs லோதா என்கிற நீண்டநாள் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com