7 வருடங்கள் கழித்து விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் நடால்!

கடைசியாக 2011-ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் ரஃபேல் நடால்... 
7 வருடங்கள் கழித்து விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் நடால்!

கடைசியாக 2011-ம் ஆண்டு விம்பிள்டன் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் ரஃபேல் நடால். அந்த வருடம் இறுதிச்சுற்று வரை முன்னேறிய நடால், ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து 2-ம் இடம் பெற்றார்.

7 வருடங்கள் கழித்து மீண்டும் விம்பிள்டன் காலிறுதி ஆட்டத்தில் அவர் விளையாடவுள்ளார்.

செக் குடியரசைச் சேர்ந்த ஜிரி வெஸ்லியை  6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்துள்ளார் நடால். 

2012-ல் இரண்டாவது சுற்றிலும் அடுத்த ஆண்டு முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார் நடால். 2014-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறினார். 2015-ல் மீண்டும் இரண்டாவது சுற்றில் தோற்றுப்போனார். அடுத்த ஆண்டு காயம் காரணமாகப் போட்டியிலேயே பங்கேற்கவில்லை. கடந்த வருடமும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் 2011-க்குப் பிறகு இந்த ஆண்டுதான் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 35-வது முறையாகக் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் காலிறுதிகளில் நடாலின் வெற்றி விகிதம் 79%. இதனால் அவர் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

நடால், இருமுறை விம்பிள்டன் போட்டியை வென்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை அவர் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வெற்றி பவனி வந்துகொண்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com