6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை: 268-க்கு கட்டுப்பட்ட இங்கிலாந்து

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை: 268-க்கு கட்டுப்பட்ட இங்கிலாந்து

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டிரெண்ட் பிரிட்ஜில் உள்ள நாட்டிங்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக வியாழக்கிழமை நடைபெறுகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

துவக்க வீரர்கள் ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தலா 38 ரன்களுடன் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில், குல்தீப் யாதவ் வலையில் வீழ்ந்த இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. இதனால் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்பு வேகத்தில் தடை ஏற்பட்டது.  

இதனிடையே பென் ஸ்டோக்ஸ் 103 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் 53 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. மேலும் ஒருநாள் போட்டிகளில் தற்போதுதான் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை முதன்முறையாக வீழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்கள்:

6/25 குல்தீப் யாதவ் v இங்கிலாந்து, நாட்டிங்கம், 2018
5/11 ஷாகித் அஃப்ரிடி v கென்யா, எட்பாஸ்டன், 2004
5/18 ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் v வங்கதேசம், மான்சஸ்டர், 2005
5/27 ஆதில் ரஷீத் v அயர்லாந்து, பிரிஸ்டல், 2017

ஒருநாள் போட்டியில் இந்தியரின் சிறப்பான பந்துவீச்சு:

6/04 ஸ்டூவர்ட் பின்னி v வங்கதேசம், மிர்பூர், 2014
6/12 அனில் கும்ப்ளே v மே.இ.தீவுகள், கொல்கத்தா, 1993
6/23 ஆசிஷ் நெஹ்ரா v இங்கிலாந்து, டர்பன், 2003
6/25 குல்தீப் யாதவ் v இங்கிலாந்து, நாட்டிங்கம், 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com