நம்பமுடியாத ஃபெடரர் தோல்வி: புள்ளிவிவரங்கள் சொல்லும் புதிய கதைகள்!

மேட்ச் பாயிண்ட் கிடைத்த பிறகு ஆட்டத்தைத் தாரை வார்ப்பதும் இது முதல்முறையல்ல...
நம்பமுடியாத ஃபெடரர் தோல்வி: புள்ளிவிவரங்கள் சொல்லும் புதிய கதைகள்!

விம்பிள்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரரும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும் மோதினார்கள். இந்தமுறை ஃபெடரர் எப்படியும் விம்பிள்டனை 9-வது முறையாக வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதேபோல ஃபெடரரும் முதல் இரு செட்களை 6-2, 7-6 என வென்றதோடு மூன்றாவது செட்டில் மேட்ச் பாயிண்ட்டையும் வைத்திருந்தார்.  ஆனால் கெவின் ஆண்டர்சன் கடுமையாகப் போராடி இந்த ஆட்டத்தை வென்றார்.

2-6, 6-7(7), 7-5, 6-4, 13-11 என காலிறுதியில் வென்ற ஆண்டர்சன், 1983-க்குப் பிறகு விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் இறுதிச் சுற்றில் நடாலிடம் தோல்வியடைந்தார் ஆண்டர்சன். இதனால் இந்தமுறையும் அவர் பெரிதாகச் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபெடரர் இதுபோல இரண்டு செட்கள் முன்னிலையில் இருந்தபிறகு தோற்பது முதல்முறையல்ல. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது முறையாக, ஒட்டுமொத்தமாக ஐந்து முறை அவர் இதுபோல 2-0 என முன்னிலையில் இருந்தபிறகு தோற்றுள்ளார்.

* 2-0 என முன்னிலையில் இருந்தபிறகு ஃபெடரர் தோற்ற ஆட்டங்கள்

2018 விம்பிள்டன் - கெவின் ஆண்டர்சன்
2011 யு.எஸ். ஓபன் - ஜோகோவிச்
2011 விம்பிள்டன் - வில்ஃப்ரைட் சோங்கா
2005 மாஸ்டர்ஸ் கோப்பை - டேவிட் நல்பேண்டியன்
2003 டேவிஸ் கோப்பை - ஹெவிட்

* மேட்ச் பாயிண்ட் கிடைத்த பிறகு ஆட்டத்தைத் தாரை வார்ப்பதும் இது முதல்முறையல்ல. கிராண்ட்ஸ்லாம்களில் இதுபோல ஃபெடரர் தோற்ற ஆட்டங்கள்:

2018 விம்பிள்டன் - கெவின் ஆண்டர்சன் ( 1 மேட்ச் பாயிண்ட்)
2011 யு.எஸ். ஓபன் - ஜோகோவிச் ( 2 மேட்ச் பாயிண்டுகள்)
2010 யு.எஸ். ஓபன் - ஜோகோவிச் (2 மேட்ச் பாயிண்டுகள்)
2005 ஆஸ்திரேலியன் ஓபன் - சஃபின் ( 1 மேட்ச் பாயிண்ட்)
2002 ஆஸ்திரேலியன் ஓபன் - டாமி ஹாஸ் (1 மேட்ச் பாயிண்ட்)

* கிராண்ட்ஸ்லாம் காலிறுதிகளில் 10-வது முறையாகத் தோற்றுள்ளார் ஃபெடரர்

4 - பிரெஞ்சு ஓபன் (2001, 2010, 2013, 2015)
4 - விம்பிள்டன் (2001, 2010, 2011, 2018)
2 - யு.எஸ். ஓபன் (2012, 2017)

* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர்

இறுதிப்போட்டி: 30 - வெற்றிகள் 20 - தோல்விகள் 10 (67%)
அரையிறுதி:  43 - வெற்றிகள் 30 - தோல்விகள் 13 (70%)
காலிறுதி: 53 - வெற்றிகள் 43 - தோல்விகள் 10 (81%) 

* நேற்றைய ஃபெடரர் - ஆண்டர்சன் இடையேயான காலிறுதி ஆட்டம் ஒவ்வொரு செட்டிலும் நீண்ட நிமிடங்கள்:

முதல் செட் - 26 நிமிடங்கள்
2-வது செட் -  52 நிமிடங்கள்
3-வது செட் - 52 நிமிடங்கள்
4-வது செட் - 34 நிமிடங்கள்
5-வது செட் - 90 நிமிடங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com