ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

தில்லியில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் உள்ள கே.டி. ஜாதவ் விளையாட்டரங்கில் வரும் 17 முதல் 22-ஆம் தேதி வரையில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் 18 நாடுகளில் இருந்து 100 வீராங்கனைகள் உள்பட, 300 பேர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, இந்தப் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை இந்திய மல்யுத்த சம்மேளனம் செவ்வாய்க்கிழமை தான் பெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான், இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு நுழைவு இசைவு (விசா) மறுத்திருந்தால், போட்டியை நடத்தும் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு, சர்வதேச சம்மேளனம் அபராதம் விதித்திருக்கும்.
இதுதொடர்பாக இந்திய மல்யுத்தச் சம்மேளன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் தவிர வேறு எங்கும் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறை குற்றப் பிரிவிடம் பொறுப்பேற்றுள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார். கடந்த 2015-இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com