இன்று தொடங்குகிறது ஒருநாள் கிரிக்கெட் தொடர்: வெற்றி நடையை தொடரும் முனைப்பில் இந்தியா

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்ஹாம் நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இன்று தொடங்குகிறது ஒருநாள் கிரிக்கெட் தொடர்: வெற்றி நடையை தொடரும் முனைப்பில் இந்தியா

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்ஹாம் நகரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
முன்னதாக, டி20 தொடர் வெற்றி தரும் ஊக்குவிப்பில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தெரிகிறது. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து, 50 ஓவர் போட்டிகளில் தற்போது மிகச் சிறந்த அணியாக உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரை 6-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்திய அணிக்கு இந்தத் தொடர், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான முன்னோட்டமாக இருக்கிறது. இத்தொடரின் அடிப்படையில் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானச் சூழல் குறித்த அனுபவத்தைப் பெற விராட் கோலி தலைமையிலான அணிக்கு இந்தத் தொடர் உதவும்.
அணி வீரர்களைப் பொருத்த வரையில், லோகேஷ் ராகுல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். எனவே, 3-ஆவது வீரராக ராகுல் களம் காண கேப்டன் கோலி வாய்ப்பளிக்கலாம் எனத் தெரிகிறது.
அவ்வாறு நிகழும் பட்சத்தில் கோலி 4-ஆவது வீரராக பேட்டிங் செய்வார். தொடக்க ஜோடி, ஷிகர் தவன்-ரோஹித் சர்மா என மாற்றமில்லாத ஒன்று. அடுத்து ராகுல், கோலி வரிசையில் வர, மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, மஹேந்திர சிங் தோனி, ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கின்றனர். கூடுதலாக ஓர் வேகப்பந்துவீச்சாளரை அணி நிர்வாகம் தேர்வு செய்தால், சித்தார்த் கெளல் அல்லது ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கும். புவனஷ்வர் குமார் மீண்டு வரும் பட்சத்தில், உமேஷ் யாதவுடன் கை கோப்பார்.
இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், இயான் மோர்கன் என பேட்ஸ்மேன்களின் வரிசை பலமிக்க படையாக உள்ளது. அவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிப்பார்கள். பந்துவீச்சில் ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டேவிட் வில்லி, மொயீன் அலி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.


அணிகள் விவரம்
இந்தியா

விராட் கோலி (கேப்டன்) 
ஷிகர் தவன், ரோஹித் சர்மா லோகேஷ் ராகுல், தோனி
தினேஷ் கார்த்திக், ரெய்னா
பாண்டியா, குல்தீப் யாதவ்
யுவேந்திர சாஹல், ஷ்ரேயஸ் ஐயர் சித்தார்த் கெளல், அக்ஸர் படேல் உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் புவனேஷ்வர்


இங்கிலாந்து
இயான் மோர்கன் (கேப்டன்)
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ்
ஜோஸ் பட்லர், மொயீன் அலி
ஜோ ரூட், ஜேக் பால், டாம் கரன் அலெக்ஸ் ஹேல்ஸ்
லியாம் பிளங்கெட்
பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத் டேவிட் வில்லி, மார்க் வுட்
ஆட்ட நேரம்: மாலை 5 மணி நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com