டிஎன்பிஎல்: திண்டுக்கல் 172 /8

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசன் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசன் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
திருநெல்வேலியில் சங்கர் நகர் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ஜெகதீசன் 8 ரன்களில் வெளியேற, உடன் வந்த ஹரி நிஷாந்த் 41 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராமலிங்கம் ரோஹித் அபாரமாக ஆடி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் விளாசினார்.
பின்னர் வந்த பாலச்சந்தர் அனிருத் 8 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விவேக் 1, சதுர்வேத் 6 ரன்கள் எடுக்க, ஆதித்யா அருண் டக் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் முகமது 12, அபினவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி தரப்பில் குமரன், லஷ்மி நாராயணன், சஞ்ஜய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். விக்னேஷ், சோனு யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் திருச்சி அணி 173 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடி வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com