இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 137 ரன்களுடன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 137 ரன்களுடன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதலில் ஆடிய இங்கிலாந்து 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஜேஸன் ராய் 38, பேர்ஸ்டோவ் 38, ஜோ ரூட் 3, கேப்டன் மோர்கன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் இணை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டோக்ஸ் 50, பட்லர் 53, மொயின் அலி 24, டேவிட் வில்லி 1, அடில் ரஷீத் 22 , பிளங்கெட் 10 ரன்களுக்கும் வெளியேறினர். மார்க் உட் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 268 ரன்களை குவித்தது. 
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் விக்கெட்டையும், உமேஷ் 2, சஹால் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். 8 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை எடுத்த தவன் மொயின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது 8.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை இந்தியா பெற்றிருந்தது. கேப்டன் விராட் கோலி-ரோஹித் இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 7 பவுண்டரியுடன் 75 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழந்தார்.
ரோஹித் அபார சதம்: 4 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 137 ரன்களை குவித்து ரோஹித் சர்மாவும், 8 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இறுதியில் 9.5 ஓவர்கள் மீதமிருக்க 40.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து இந்திய அணி 269 ரன்களுடன் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் மொயின், அடில் ரஷீத் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com