விம்பிள்டன் ஆடவர் டென்னிஸ்: 4-ஆவது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். 
படம்: ட்விட்டர்/விம்பிள்டன்
படம்: ட்விட்டர்/விம்பிள்டன்

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 6-2, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.    

விம்பிள்டன் ஆடவர் டென்னிஸ் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடி வந்தார். அதன்மூலம் முதலிரண்டு செட்களை 6-2, 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 

இதனால், ஆண்டர்சன் கடும் நெருக்கடியுடன் 3-ஆவது செட்டை எதிர்கொண்டார். இதில், ஜோகோவிச்சுக்கு ஆண்டர்சன் கடும் போட்டியாக திகழந்தார். இருப்பினும், ஆண்டர்சனால் இந்த செட்டிலும் ஜோகோவிச்சை முறியடிக்க முடியவில்லை. இதனால் 3-ஆவது செட்டையும் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.   

இதன்மூலம், ஜோகோவிச் 6-2,6-2,7-6(7-3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

ஆண்டர்சன், விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் நடைபெற்ற போட்டியான நடப்பு விம்பிள்டன் அரையிறுதியில் இஸ்னருக்கு எதிராக கடுமையாக போராடி பெற்ற வெற்றியை இறுதிப்போட்டியில் தவறவிட்டார். 

ஜோகோவிச்:

  • 4-ஆவது விம்பிள்டன் பட்டம் 
  • 13-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்
  • அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களில் 4-ஆவது இடம் 
  • 2016-க்குப் பிறகு முதல் கிராண்ட்ஸ்லாம் 
  • ஏடிபி டென்னிஸ் தரவரிசையின் டாப் 10-இல் மீண்டும் இடம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com