பெல்ஜியம் மூன்றாமிடம் 

உலகக் கோப்பை கால்பந்து மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து-பெல்ஜியம் இடையே சனிக்கிழமை இரவு செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.
பெல்ஜியம் மூன்றாமிடம் 

உலகக் கோப்பை கால்பந்து மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து-பெல்ஜியம் இடையே சனிக்கிழமை இரவு செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.
அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் 1-0 என பெல்ஜியமும், குரோஷியாவிடம் 2-1 என இங்கிலாந்து அணியும் தோல்வியுற்றன. இந்நிலையில் மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.
இந்த உலகக் கோப்பை முதல் சுற்றிலேயே இரு அணிகளும் மோதியதில் பெல்ஜியம் 1-0 என வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஆட்டம் தொடங்கியது முதலே பெல்ஜிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முனைந்தனர். 4-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் சாடி அனுப்பிய பந்தை மிட்பீல்டர் தாமஸ் மியுனியர் அற்புதமாக கோலாக்கினார். பதிலுக்கு இங்கிலாந்து வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. முதல்பாதி ஆட்ட நிறைவில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து வீரர்கள் பதில் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். இரண்டு மாற்று வீரர்கள் அனுப்பப்பட்டனர். எனினும் பெல்ஜிய அணியினர் தங்கள் பிடியை தளர்த்தவில்லை. 82-ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கெவின் டி புருயன் கடத்திய அனுப்பிய பந்தை கேப்டன் ஈடன் ஹசார்ட் அற்புதமாக கோலாக்கினார். ஆட்டம் முடியும் வரை இங்கிலாந்து வீரர்களால் கோலடிக்க முடியவில்லை.
இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்று மூன்றாம் இடத்தைப் பெற்றது. இங்கிலாந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
கடந்த 1986-இல் உலகக் கோப்பையில் பெல்ஜிய அணி நான்காம் இடத்தையே பெற்றிருந்த நிலையில் தற்போது மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com