மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்

கால்பந்து விளையாட்டில் பிரசித்தி பெற்ற நட்சத்திர வீரர்களான ஆர்ஜென்டீனா மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் வரிசையில் குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்கும் இடம் பெற்றுள்ளார்.
மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்

கால்பந்து விளையாட்டில் பிரசித்தி பெற்ற நட்சத்திர வீரர்களான ஆர்ஜென்டீனா மெஸ்ஸி, போர்ச்சுகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் வரிசையில் குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்கும் இடம் பெற்றுள்ளார்.
கால்பந்து என்றாலே பீலே, மாரடோனா, ரொமாரியோ, உள்ளிட்ட சில வீரர்களின் பெயர்கள் நினைவுக்கு வரும். எனினும் கடந்த 10 ஆண்டுகளாக உலக கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் கோலோச்சி வருகின்றனர். இருவரும் தலா 5 ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றனர். மேலும் மெஸ்ஸி பார்சிலோனா அணியிலும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலும் ஆடி அவற்றுக்காக பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தனர்.
எனினும் மெஸ்ஸியால் ஆர்ஜென்டீனா அணிக்கு பெரிய வெற்றிகளை தேடித் தரமுடியவில்லை. உலகக் கோப்பை, கோபா அமெரிக்க போட்டிகளில் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. 2016-இல் யூரோ சாம்பியன் பட்டத்தை போர்ச்சுகல் பெற ரொனால்டோ காரணமாக இருந்தார்.
தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றோடு மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் அவர்களது இடத்தை குரோஷிய கேப்டன் லுகா மொட்ரிக் பெற்றுள்ளார். 
அவருக்கு 6 வயதான போது தாத்தா சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பம் போர் முனையில் அகதிகளாக மாறியது. குண்டுகள் சத்தத்தின் மத்தியில் மொட்ரிக் வளர்ந்தார். 
கால்பந்து விளையாடுவதற்கு பலவீனமான அவரால் முடியாது என பயிற்சியாளரால் ஓரம் கட்டப்பட்டார். தற்போது அவர் தனது குரோஷிய அணியை இறுதி ஆட்டத்துக்கு வழிநடத்தி உள்ளார். தங்க கால்பந்து விருது பெறும் வீரராக மொட்ரிக் மாறியுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வரும் அவர் கடந்த 5 ஆண்டுகளாக அந்த அணியின் வெற்றிக்கு அமைதியாக உதவியுள்ளார். உலகின் மிகச்சிறந்த மிட்பீல்டர் என்ற பெயரை பெற்றுள்ள மொட்ரிக் தனது குரோஷிய அணி தற்போது உலகக் கோப்பை கால்பந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவி புரிந்தார்.
முதல் சுற்றில் வலுவான ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது சக வீரர்கள் கிராமரிச், அன்டே ரெபிச், பெரிசிச் ஆகியோர் கோலடிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.
நாக் அவுட் சுற்று ஆட்டங்களிலும் குரோஷிய அணியின் வெற்றியை உறுதி செய்த மொட்ரிக் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சக வீரர் பெரிஸிச் கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.
ரஷியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களில் மொட்ரிக் முதன்மையான இடத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com