ஆசிய விளையாட்டு போட்டி ஜோதி ஓட்டம்

ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஜோதி ஓட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜோதியை ஏந்திச் சென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.
ஆசிய விளையாட்டுப் போட்டி ஜோதியை ஏந்திச் சென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.

ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஜோதி ஓட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தா, பாலேம்பங்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரைநடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆசிய போட்டிகள் 1951-இல் முதன்முதலில் தொடங்கிய புது தில்லியில் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, இந்தோனேஷியா ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் எரிக் தோஹிர் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்தோனேஷிய பாட்மிண்டன் நட்சத்திரம் சுஸி சுஸாந்தி ஜோதியை இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிடம் வழங்கினார். அவர் அதை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடினார். ஹாக்கி வீரர்கள் ஸ்ரீஜேஷ், சர்தார் சிங், டேபிள் டென்னிஸ் மனிகா பத்ரா, சரத்கமல் துப்பாக்கி சுடுதல் ஜித்துராய் உள்ளிட்டோரும் ஜோதியை எடுத்துக் கொண்டு ஓடினர். 

இந்தியாவில் இருந்து ஜோதி நேராக இந்தோனேஷியாவின் மத்திய ஜாவாவில் பிரம்பனில் உள்ள பழைய ஹிந்து கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு புனித ஜோதியில் சேர்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டு ஜோதி 18 மாகாணங்களில் உள்ள 54 நகரங்களில் 18 ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து போட்டி தொடங்கும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜாகர்த்தாவை அடையும். 

இதுதொடர்பாக அமைப்புக் குழுத் தலைவர் தோஹிர் கூறுகையில்: ஆசிய போட்டியில் பங்கேற்க 16920 வீரர்கள், அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 11 ஆயிரம் வீரர்கள் 40 விளையாட்டுகளில் 67 பிரிவுகளில் பதக்கங்களுக்கு போட்டியிடுகின்றனர் என்றார்.

ஐஓஏ பொதுச் செயலர் ராஜிவ் மேத்தா, விளையாட்டுத் துறை செயலாளர் ராகுல் பட்நகர், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் துணைத் தலைவர்கள் வெய் úஸாங், ரந்தீர்சிங் பங்கேற்றனர். ஜோதி ஓட்ட அமைப்பாளர்கள் செய்த குளறுபடியால் முன்னணி வீரர், வீராங்கனைகள் செய்தியாளர்கள் பயணித்த வாகனத்தில் செல்ல நேர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com