கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு

21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு மாஸ்கோவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள்.
நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள்.

21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு மாஸ்கோவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
கடந்த ஜூன் 14-ஆம் தேதி உலகக் கோப்பை வாண வேடிக்கை, வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஒரு மாதமாக மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற 64 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ்-குரோஷிய அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் நடைபெற்றது. 
அதற்கு முன்னதாக நிறைவு விழா நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், அதிகாரப்பூர்வ பாடலான லிவ் இட் அப் என்ற பாடலை பாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். அவருடன் பாடலை எழுதிய அமெரிக்க பாடலாசிரியர் நிக்கி ஜாம், கொளஸாவா கலைஞர் எரா இட்ரெபி ஆகியோரும் பாடினர். 

பின்னர் ரஷிய நாட்டு கலைஞர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நாட்டு அணிகள், வீரர்களின் படங்களுடன் நடனங்கள், அணிவகுப்பு நடைபெற்றது. ரஷிய அதிபர் புதின் வரும் 2022-இல் உலகக் கோப்பை போட்டி நடக்கவுள்ள கத்தார் நாட்டின் கால்பந்து கூட்டமைப்பினரிடம் உலகக் கோப்பை ஜோதியை வழங்கினார். 
பிஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், குரோஷிய அதிபர் கொலிந்தா கிராபர் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
அரங்கம் முழுவதும் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரான்ஸ், குரோஷிய ரசிகர்கள் கூடியிருந்து தங்கள் அணிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். உலகக் கோப்பை நிறைவு விழாவை முன்னிட்டு மாஸ்கோ நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com