விம்பிள்டன் ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை வென்று ஜோகோவிச் தனது 4-ஆவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
விம்பிள்டன் ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை வென்று ஜோகோவிச் தனது 4-ஆவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். முதலிரண்டு செட்களை 6-2, 6-2 என ஜோகோவிச் எளிதாக வென்றார். எனினும் மூன்றாவது செட் ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் சிறிது போட்டியை ஏற்படுத்தினார். எனினும் ஜோகோவிச் அதை சமாளித்து 7-6 என வென்றார்.
இதன் மூலம் அவர் விம்பிள்டனில் 4-ஆம் முறையாக பட்டத்தை வென்றார். கடும் காயம் காரணமாக பல மாதங்கள் விளையாடாத நிலையில் அவர் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்க்து.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரையன் சகோதரர்களில் ஒருவரான மைக் பிரையன்-ஜேக் ஸ்டாக் இணை 6-3, 6-7, 6-3, 5-7, 7-5 என 5 செட்களில் போராடி ராவன் கிளாஸன்-மைக்கேல் வீனஸ் இணையை வீழ்த்தி சாம்பியன பட்டம் வென்றது. மைக் பிரையன் தனது சகோதரர் பாப் பிரையன் இல்லாமல் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இருவரும் இணைந்து 16 பெரிய போட்டிகளில் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக பாப் பிரையன் விளையாடவில்லை.
மகளிர் இரட்டையர் பிரிவில் பார்போரா கெஜிசிகோவா-கத்ரீனா சினிகோவா இணை 6-4, 4-6, 6-0 என நேர் செட்களில் கெடா பெஸ்க்-நிக்கோல் மெலிச்சர் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com