இங்கிலாந்துடன் இன்று 3-ஆவது ஒரு நாள் ஆட்டம்: தொடரை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தை 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் வென்றன. இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடரை வெல்பவரை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் ஹெட்டிங்கலியில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவன் இன்னும் சோபிக்கவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். முதலிரண்டு ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் அபாரமாக பந்துவீசினார். 
இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய், ஜோ ரூட், மோர்கன் ஆகியோர் பிரமாதமாக ஆடும் நிலையில் ஏ. னைய வீரர்கள் சரிவர ஆடாதது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பந்து வீச்சில் பிளங்கட் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹேம்ப்ஷையர் அணி கேப்டன் வின்ஸ் சேர்க்கப்பட்டது கூடுதல் பலத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர ஆடாதது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தோனியும் சரிவர ஆடாதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசி வருகின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சில் தேவையான அழுத்தம் இல்லை. புவனேஸ்வர்குமார், பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சு பலமிழந்து காணப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளார். ஆனால் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வழக்கமான வகையில் விளையாடதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டி 20 தொடரைப் போலவே 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com