போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள்.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள்.

குமரியில் தெற்காசிய சிலம்பப் போட்டி: இந்திய அணி சாம்பியன்

கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்ற தெற்காசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இந்திய அணி 177 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்ற தெற்காசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இந்திய அணி 177 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
தெற்காசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கன்னியாகுமரியில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தனித்திறமை விளையாட்டுப் பிரிவில் நடுக்கம்பு வீச்சு, இரட்டை நடுக்கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றைவாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, ஒற்றைச்சுருள் வாள்வீச்சு, இரட்டைச் சுருள் வாள்வீச்சு, மடுவு உள்ளிட்ட விளையாட்டுகளும், ஜோடி விளையாட்டுகளில் கம்பு ஜோடி விளையாட்டு, மான்கொம்பு ஜோடி விளையாட்டு மற்றும் கம்புச்சண்டை ஆகியவையும் நடைபெற்றது.
இறுதியில் இந்திய அணி 177 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இலங்கை அணி 66 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், வங்கதேச அணி 38 புள்ளிகளுடன் மூன்றாமிடமும், நேபாளம் அணி 17 புள்ளிகள் பெற்று நான்காம் இடமும் பிடித்தன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வங்கதேச சிலம்பம் பெடரேஷன் தலைவர் முகமது இஸ்லாம், இலங்கை சிலம்பம் பெடரேஷன் இயக்குநர் அப்துர்ரகுமான், அகில இந்திய சிலம்பம் சம்மேளன நிர்வாகிகள் ஷாஜி, அருள்பிரகாஷ் ,பொதுச்செயலர் ஐரின், போட்டி இயக்குநர்கள் சுதாகர், முனியசாமி, தெற்காசிய சிலம்ப சம்மேளன தலைவர் பி.செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை தெற்காசிய சிலம்பம் சம்மேளன முன்னாள் துணைத் தலைவர் ஜே.ஜே.ஆர். ஜஸ்டின் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com