கோலியின் பெருமையைத் தகர்த்த இங்கிலாந்து அணி! சோதனையிலும் தொடரும் சில சாதனைகள்! 

கோலியின் தலைமையில் இந்திய அணி முதல்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது...
கோலியின் பெருமையைத் தகர்த்த இங்கிலாந்து அணி! சோதனையிலும் தொடரும் சில சாதனைகள்! 

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர். முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நேற்றைய ஆட்டத்தில் கோலியின் முக்கியமான சாதனை ஒன்று இங்கிலாந்து அணியால் தகர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேப்டன் பதவி கோலியின் பேட்டிங்கை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. அதில் தொடர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிறார் கோலி.

தகர்க்கப்பட்ட சாதனைகளும் தொடரும் ரன் வேட்டையும்

* 2016-ல் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையிலான 9 ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்று வந்த நிலையில் நேற்று 1-2 என இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

* அதேபோல, கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையிலான ஏழு ஒருநாள் தொடர்களை வென்ற நிலையில் நேற்று அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது. இதையடுத்து கோலியின் தலைமையில் இந்திய அணி முதல்முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.

vs ஜிம்பாப்வே 3-0, 2013
vs இலங்கை 5-0, 2014
vs இங்கிலாந்து 2-1, 2017
vs மே.இ. 3-1, 2017
vs இலங்கை 5-0, 2017
vs ஆஸ்திரேலியா 4-1, 2017
vs நியூஸிலாந்து 2-1, 2017
vs தென் ஆப்பிரிக்கா 5-1, 2018
vs இங்கிலாந்து 1-2, 2018

* இந்திய அணியின் இரு ஒருநாள் சாதனைகளைத் தடுத்து நிறுத்தியுள்ள இங்கிலாந்து, இந்த வெற்றியுடன், கடந்த 8 ஒருநாள் தொடர்களைத் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இந்தச் சாதனையை எந்த அணி தகர்க்கப்போகிறது?

* எனினும் கோலியின் பேட்டிங் சாதனைகளுக்கு எவ்விதக் குறையுமில்லை. ஒரு கேப்டனாக அதிவிரைவாக 3000 ரன்களை எடுத்துள்ளார் கோலி. 

கேப்டன்கள் - குறைந்த இன்னிங்ஸில் 3000 ஒருநாள் ரன்கள்

49 ஒருநாள் இன்னிங்ஸ் - விராட் கோலி
60 ஒருநாள் இன்னிங்ஸ் - டி வில்லியர்ஸ் 
70 ஒருநாள் இன்னிங்ஸ் - தோனி
74 ஒருநாள் இன்னிங்ஸ் - கங்குலி
83 ஒருநாள் இன்னிங்ஸ் -  கிரீம் ஸ்மித் / மிஸ்பா உல் ஹக்
84 ஒருநாள் இன்னிங்ஸ் - ஜெயசூர்யா / ரிக்கி பாண்டிங்

கோலி: கேப்டனாக 3000 ரன்கள்

முதல் 1000 ரன்கள்: 17 இன்னிங்ஸ்
அடுத்த 1000 ரன்கள்: 19 இன்னிங்ஸ்
அடுத்த 1000 ரன்கள்: 13 இன்னிங்ஸ்

* 2018-ல் விராட் கோலியின் ஒருநாள் ரன்கள்

112
46*
160*
75
36
129*
75
45
71

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com