ஆசிய விளையாட்டுப் போட்டி: துவக்க ஆட்டத்தில் ஹாங்காங்குடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதல்

ஜாகர்த்தா ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஹாங்காங் சீனாவை எதிர்கொள்கிறது. 
ஆசிய விளையாட்டுப் போட்டி: துவக்க ஆட்டத்தில் ஹாங்காங்குடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதல்

ஜாகர்த்தா ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஹாங்காங் சீனாவை எதிர்கொள்கிறது. 
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதில் ஹாக்கியில் இந்திய அணி ஏ பிரிவில் கொரியா, ஜப்பான், இலங்கை, ஹாங்காங் சீனா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. ஆக. 24-இல் ஜப்பான், 26-இல் கொரியா, 28-இல் இலங்கையுடன் இந்திய அணி மோதுகிறது. பி பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், தாய்லாந்து, இந்தோனேஷியா இடம் பெற்றுள்ளன.
மகளிர் அணி: மகளிர் பிரிவில் பி பிரிவில் கொரியா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட அணிகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஏ பிரிவில் சீனா, ஜப்பான், மலேசியா, ஹாங்காங் சீனா, தைபே உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்திய மகளிரணி ஆக. 19-இல் இந்தோனேஷியா, 21-இல் கஜகஸ்தான், 25-இல் கொரியா, 27-இல் தாய்லாந்து அணிகளுடன் மோதுகிறது. 14 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் 14 நாள்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆடவர், மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விடும். ஹாக்கி விளையாட்டில் விடியோ நடுவர் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com