தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர்
தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைப்பற்றியது. அந்த அணியின் ஜோ ரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் முறையே 100, 88 ரன்களை எடுத்தனர்.
முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டை இழந்து 256 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 71 ரன்களை குவித்தார். இங்கிலாந்தின் டேவிட் வில்லி, அடில் ரஷீத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித் 2, தவன் 44 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். 
8 பவுண்டரியுடன் 71 ரன்களை எடுத்த கேப்டன் விராட் கோலி, 21 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் மற்றும் சுரேஷ் ரெய்னா 1 ரன்னுடன் அடில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தனர். அதன்பின் தோனி-ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
தோனி 42 ரன்களிலும், பாண்டியா 21 ரன்களுக்கும்,, புவனேஸ்வர்குமார் 21 ரன்களிலும் வெளியேறினர். சர்துல் தாகுர் 22 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 
50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 256 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் வில்லி, ரஷீத் தலா 3 விக்கெட்டையும், மார்க் உட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 
257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இதில் வின்ஸ் 27, பேர்ஸ்டோவ் 30 ரன்களிலும் வெளியேறினர். 
பினனர் ஜோ ரூட்-கேப்டன் மோர்கன் இணை இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலன்தரவில்லை. 10 பவுண்டரியுடன் 100 ரன்களுடன் ஜோ ரூட்டும், 1 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 88 ரன்களுடன் மோர்கனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 44.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் தாகுர் மட்டுமே 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
கோலி புதிய சாதனை
ஒரு நாள் ஆட்டங்களில் மிக விரைவாக 3000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை இந்திய கேப்டன் கோலி நிகழ்த்தினார்.
இங்கிலாந்துடன் நடந்த 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 10-ஆவது ஓவரின் போது இந்த சாதனையை அவர் பெற்றார். 49 இன்னிங்ஸில் 3000 ரன்களை கோலி எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com