விராட் கோலி சதம் அடிக்க மாட்டார் என்றா நான் கூறினேன்?: சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆஸி. வீரர் கம்மின்ஸ் விளக்கம்!

விராட் கோலிக்கு மிகச்சிறந்த பாராட்டைத் தெரிவிக்கவே விரும்பினேன். எங்களுக்கு எதிரான தொடரில் அவர் சதமெடுக்கக்கூடாது என்று...
விராட் கோலி சதம் அடிக்க மாட்டார் என்றா நான் கூறினேன்?: சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆஸி. வீரர் கம்மின்ஸ் விளக்கம்!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடிக்க மாட்டார் என்று சிலநாள்களுக்கு முன்பு, சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: என்னுடைய துணிச்சலான கணிப்பு - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சதமடிக்க மாட்டார். இங்கு வரும் இந்திய அணியை நாங்கள் வீழ்த்துவோம் என்றார்.

கம்மின்ஸின் இந்தப் பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து தன்னுடைய பேச்சுக்கு கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் சொன்னதாக நினைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பதமாகவே நான் சொன்னேன். விராட் கோலிக்கு மிகச்சிறந்த பாராட்டைத் தெரிவிக்கவே விரும்பினேன். எங்களுக்கு எதிரான தொடரில் அவர் சதமெடுக்கக்கூடாது என்று கூறவே விரும்பினேன். 

அவர் அணியின் முக்கியமான வீரர். அட்டகாசமான பேட்ஸ்மேன். எனவே அவர் ரன்கள் எடுக்காமல் இருந்தால் அது எங்களுடைய வெற்றிக்கு உதவும். எந்தவொரு கிரிக்கெட் வீரரும் எங்களுக்கு அணிக்கு எதிராக ரன்கள் எடுக்க விரும்பமாட்டேன். அதுபோலவே கோலிக்கும் எண்ணினேன். 

எங்களுக்கு எப்படி ஸ்டீவ் ஸ்மித்தோ அதுபோல கோலியும் அவருடைய அணிக்கு முக்கிய வீரராக உள்ளார். இவ்வகை வீரர்கள் தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்துபவர்கள். இதனால் மற்ற வீரர்களும் அதேபோல விளையாட எண்ணுவார்கள். ஓர் அணியின் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளர்கள் வீழ்த்த எண்ணும் முக்கிய விக்கெட்டுகளாக இருப்பார்கள். எனவே இந்தமுறையும் அது மாறப்போவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com