இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் ரிஷப் பந்த்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் ரிஷப் பந்த்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இது, அவர் விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் தொடராகும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். இது, அவர் விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் தொடராகும்.
ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமையின் அடிப்படையில் அணியில் இணைந்துள்ள ரிஷப் பந்த், இந்த டெஸ்ட் தொடரில் அணியின் ஒரே புதுமுகம் ஆவார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்துக்கு, இந்திய ஏ' அணியில் இருந்தபோது இங்கிலாந்து மண்ணில் விளையாடி அனுபவம் உள்ளது.
மறுபுறம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக, ஃபார்மில் இருக்கும் மூத்த வீரர் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்டில் வாய்ப்பை இழந்த முகமது சமி, தற்போது யோ-யோ தேர்வில் தேர்ச்சி அடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
காயத்திலிருந்து முழுவதுமாக மீள வேண்டியிருக்கும் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்ப்பது குறித்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முடிவுவெடுக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, 2-ஆவது டெஸ்டிலிருந்து அணியில் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அணியில் இருந்தாலும் விளையாடும் வாய்ப்பு பெறாத கருண் நாயர் மற்றும் ஷர்துல் தாக்குர், இந்த டெஸ்டுக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று கேப்டன் கோலி கூறியுள்ளதற்கு தோதாக, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சைப் பொருத்த வரையில் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர் ஆகியோரோடு, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவும் இணைந்துள்ளனர். 
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாவத், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்குர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com