ஈரான், பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய சவால்: அஜய் தாக்குர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியாவுக்கான மிகப் பெரிய சவாலாக ஈரான், பாகிஸ்தான் அணிகள் இருக்கும் என்று இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாக்குர் கூறினார்.
ஈரான், பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய சவால்: அஜய் தாக்குர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியாவுக்கான மிகப் பெரிய சவாலாக ஈரான், பாகிஸ்தான் அணிகள் இருக்கும் என்று இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாக்குர் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் கபடியில் இந்திய ஆடவர் அணி தொடர்ந்து 8-ஆவது தங்கத்தை இலக்கு வைத்து களம் காண்கிறது. அதேபோல் மகளிரணி தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கத்தை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் ஆடவர் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் சென்னையில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
நமது வீரர், வீராங்கனைகள் நெருக்கடியான நிலையிலும் தொடர்ந்து தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். துபையில் சமீபத்தில் நிறைவடைந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வென்றது, ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படுவதற்கான உற்சாகத்தை அளித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியை பொருத்த வரையில் இந்திய அணிக்கான மிகப்பெரிய சவாலாக ஈரான், பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் இருக்கும். ஏனெனில், அவர்கள் அணியில் துடிப்பான இளம் வீரர்கள், அனுபவம் மிக்க மூத்த வீரர்கள் என சரியான கலவையில் உள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலைகளிலும் மீண்டுவந்து போட்டியிடக் கூடிய திறன் அவர்களிடம் உண்டு. அவர்களுக்கு எதிரான வெற்றி சிறப்பானதாக இருக்கும். புரோ கபடி லீக் போட்டியானது, இந்தியாவில் கபடியின் தரத்தை உயர்த்தியுள்ளது. பலருக்கு வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என்று அஜய் தாக்குர் கூறினார்.
புரோ கபடி லீக் போட்டியில் அஜய் தாக்குர், தமிழ் தலைவாஸ் அணி கேப்டனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com