உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா இன்னும் மேம்பட வேண்டும்: கேப்டன் விராட் கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்று கேப்டன் விராட்
உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா இன்னும் மேம்பட வேண்டும்: கேப்டன் விராட் கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணி இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
தோல்விக்குப் பிறகு கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற ஆட்டங்களே நாங்கள் எந்த இடத்தில் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது. அணி நிலையாக திறமையை வெளிப்படுத்த வேண்டியிருப்பதுடன், உலகக் கோப்பை போட்டிக்குள்ளாக தவறுகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் அனைத்துத் தரப்பிலும் அணி சிறப்பாகச் செயல்பட வேண்டியுள்ளது.
3-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு தகுதியுடையதாய் இருந்தது. அவர்கள் அனைத்துத் தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்களது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதுடன், இடைவெளியில் ரன்கள் வழங்காமலும் பார்த்துக் கொண்டனர். ஆடுகளமானது, ஆட்டம் முழுவதுமாக மெதுவான பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்தது ஆச்சரியமளிக்கிறது.
இந்திய அணியில் கடைசி ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்பட்டவர்களில் தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடத் தொடங்கியபோதும், அதனை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. ஷர்துல் தாக்குர் இன்னும் சர்வதேச ஆட்டத்துக்கான அனுபவத்தை பெற வேண்டியுள்ளது. புவனேஷ்வர் குமார் இன்னும் முழுவதுமாக மீண்டு வர வேண்டியுள்ளது. எனினும், வீரர்களை மாற்றி வாய்ப்பு வழங்கியதில் எந்த வருத்தமும் இல்லை.
தற்போது டெஸ்ட் தொடருக்கான தகுந்த அணி தயாராக உள்ளது. இந்தத் தொடர் மிக நீண்டதாக இருக்கப் போகிறது. நாங்கள் கடினமான கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். இங்கிலாந்து அணியினர் அதற்கான வாய்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று விராட் கோலி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com