தமிழ்நாடு பிரீமியர் லீக்: கோவை-185/5

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல்லில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி ஃபீல்டிங் செய்யத் தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த கோவை அணியில் தொடக்க வீரர் ஷாருக் கான் அபாரமாக ஆடி 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 86 ரன்கள் குவித்தார். உடன் வந்த கேப்டன் அபினவ் முகுந்த், முதல் விக்கெட்டாக 4 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் வந்த ரஞ்ஜன் பால் டக் அவுட்டாக, அடுத்து களம் கண்ட ரவிகுமார் ரோஹித் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 26 ரன்களுக்கு வெளியேறினார். கடைசி விக்கெட்டாக அந்தோணி தாஸ் ஒரு ரன்னுக்கு வீழ்ந்தார்.
20 ஓவர்கள் முடிவில் அகில் ஸ்ரீநாத் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்களுடனும், வெங்கடராமன் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் தரப்பில் முகமது, கெளஷிக், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர். அதையடுத்து திண்டுக்கல் அணி 186 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com