2022 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் கத்தார்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக கத்தார் முன்கூட்டியே தயாராகி வருகிறது.
2022 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் கத்தார்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக கத்தார் முன்கூட்டியே தயாராகி வருகிறது.
ரஷியாவில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் போட்டிகள் கடந்த 1 மாதமாக கோலாகலமாக நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இதில் பெல்ஜியம், பிரான்ஸ், குரோஷியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வென்று பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ரூ.87 ஆயிரம் கோடி செலவில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் 22-ஆவது உலகக் கோப்பை ஆசிய நாடான கத்தாரில் நடக்கிறது. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கத்தார் போட்டிகள் நடக்கவுள்ளன. முக்கியமாக மைதானத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. 2022 நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
கத்தார் நிதி அமைச்சர் அலி ஷெரிப் கூறுகையில், போட்டி தொடங்குவதற்கு முன்னரே அனைத்து பணிகள் முடிக்கப்பட்டு விடும். ரசிகர்கள் வரும் போது, மைதானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை செய்ய நாங்கள் விரும்பவில்லை என்றார்.
உலகக் கோப்பைக்காக கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டு வரும் 8 மைதானங்களில் காலிபா மைதானம் தயாராக உள்ளது. இங்கு வரும் 2019-இல் உலக தடகள சாம்பியன் போட்டிகள் நடக்கின்றன. அல் வக்ரா, அல் பெயட் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்து விடும். தொடக்க மற்றும் இறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ள லுஸாயில் மைதானம் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான நிலையிலும் கத்தார் உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்த முனைப்புடன் உள்ளது. சவுதி, ஐக்கிய அரபு நாடுகள், கூட்டணியுடன் கத்தாருக்கு உறவு சிறப்பாக இல்லை.
மைதான கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டது. எனினும் கத்தார், உடனே சீனா மற்றும் மலேசியாவில் இருந்து பொருள்கள் 
தருவித்துவுள்ளன.
புதிய சாலைகள், அருங்காட்சியகம், ஹோட்டல்கள் தயாராகி வருகின்றன. மெட்ரோ ரயில் முறையும் தயாராக உள்ளது. 1.5 கோடி பேர் உலகக் கோப்பையை காண வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல், டென்ட், சொகுசு கப்பல்களில் ரசிகர்கள் தங்க வைக்கப்படுவர். பழமைவாத முஸ்லிம் நாடான கத்தாரில் சில பகுதிகளில் மது அருந்த அனுமதி தரப்படுகிறது. 32-இல் இருந்து 48 ஆக அணிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் எங்கே தங்க வைப்பது என சிக்கல் உள்ளது. ஈரான் தங்கள் தீவான கிஷ் பகுதியில் அணிகளை தங்க வைக்க முன்வந்துள்ளது. பாதுகாப்புக்காக வெளிநாட்டு போலீஸார் ஈடுபடுத்தப்படுவர். போர் விமானங்களையும் அதில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com