டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை!

ரபடா அந்த விக்கெட்டை எடுக்காமல் விட்டிருந்தால் 10 விக்கெட்டுகளையும் அள்ளியிருப்பார் மஹாராஜா...
டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர் சாதனை!

ரபடா அந்த விக்கெட்டை எடுக்காமல் விட்டிருந்தால் 10 விக்கெட்டுகளையும் அள்ளியிருப்பார் மஹாராஜா.

கொழும்பில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்கள் அரை சதம் எடுத்தாலும் அதன்பிறகு வந்த வீரர்களால் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போனது. தனஞ்ஜெயா மட்டும் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி இன்று 104.1 ஓவர்களில் தனது முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர் மஹாராஜா, 41.1 ஓவர்கள் வீசி 129 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மீதமுள்ள ஒரு விக்கெட்டை ரபாடா எடுத்தார். 

இதற்கு முன்பு 1957-ல் இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஹியுக் டேவீல்ட் 113 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்தார். அதற்கடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர், மஹாராஜா. டெஸ்ட் கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு வெளியே, கொல்கத்தாவில் க்ளூஸ்னர் 8/64 எடுத்ததுதான் சிறப்பான தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் மஹாராஜா. இலங்கையில் இதற்கு முன்பு முரளிதரனும் (9/51), ஹெராத்தும் (9/127) 9 விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள். அந்தப் பட்டியலில் மஹாராவும் இணைந்துள்ளார். இலங்கையில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்துவீச்சாளர்களில் ஹெராத்தும் மஹாராஜாவும் மட்டுமே 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி 34.5 ஓவர்களில் 124 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் டு பிளெஸ்ஸி 48 ரன்கள் எடுத்தார். தனஞ்ஜெயா 5 விக்கெட்டுகளும் பெரேரா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதையடுத்து இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வலுவான நிலையுடன் விளையாடி வருகிறது. 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்டிலும் இலங்கை அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com