ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்: ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மல்யுத்த போட்டியில் சச்சின் ரதி மற்றும் பாட்மிண்டன் போட்டியில் லக்ஷ்யா சென் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தங்கப்பதக்கம் வென்றனர்.

ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், 74 கிலோ எடை கொண்ட மல்யுத்த பிரிவு இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் சச்சின் ரதி மங்கோலிய வீரர் பேட் எரிதீனை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி மங்கோலிய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக, பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தாய்லாந்து வீரர் குன்லவத் விடிட்சார்னை எதிர்கொண்டார். இதில், லக்ஷ்ய சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
 
லக்ஷ்யா சென்னுக்கு முன் கௌதம் தாக்கர் 1965-ஆம் ஆண்டில் மற்றும் பிவி சிந்து 2012-ஆம் ஆண்டில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com