நியூஸிலாந்துடன் ஹாக்கி தொடரை (2-0) வென்றது இந்தியா

நியூஸிலாந்து ஹாக்கி அணியுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி.
நியூஸிலாந்துடன் ஹாக்கி தொடரை (2-0) வென்றது இந்தியா

நியூஸிலாந்து ஹாக்கி அணியுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி.
 உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியுடன் ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று விளையாடி வருகிறது.
 பெங்களூரு சாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இத்தொடரில் முதல் ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் ஏற்கெனவே இந்தியா வென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதியில் இந்திய பார்வர்ட் சுனில் துவக்கத்திலேயே கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை நியூஸி கோல்கீப்பர் ரிச்சர்ட் தடுத்தார். மேலும் தனக்கு கிடைத்த 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா வீணடித்தது.
 இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி தனது தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை அடித்தார். பினனர் நியூஸி வீரர் ஸ்டீபன் ஜென்னஸ் பதில் கோலை அடித்தார்.
 27-ஆவது நிமிடத்தில் சுனில் அற்புதமாக பீல்ட் கோலை அடித்தார். 56-ஆவது நிமிடத்தில் மந்தீப் சிங் வெற்றி கோலை அடித்தார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்ற இந்தியா 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com