ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: இந்தியர்கள் இருவருக்கு தங்கம்

தில்லியில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சச்சின் ரதி, தீபக் பூனியா ஆகியோர் தங்களது பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: இந்தியர்கள் இருவருக்கு தங்கம்

தில்லியில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சச்சின் ரதி, தீபக் பூனியா ஆகியோர் தங்களது பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
 இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 4 இந்தியர்கள் பதக்க சுற்றுகளுக்கு முன்னேறியிருந்தனர். இதில் 74 கிலோ எடைப் பிரிவில் சச்சின் ரதி தனது இறுதிச்சுற்றில் மங்கோலியாவின் பேட் எர்டென் யாம்பசுரேனை வீழ்த்தினார்.
 அதேபோல், ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபக் பூனியா, துருக்மேனிஸ்தானின் அஸாத் கஜ்யேவை தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார். முன்னதாக அவர், ஈரானின் சையது சஜ்ஜாத் சையது மெஹதி (8-2), கஜகஸ்தானின் டானியார் மெல்டெபெக் (11-0), ஜப்பானின் காய்ரி யாகி (16-6) ஆகியோரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
 இதுதவிர, ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சூரஜ் குமார் கொகடே 6-9 என்ற கணக்கில் கஜகஸ்தானின் சைர்பாஸ் தால்காட்டிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்தியரான மோஹித், 125 கிலோ எடைப் பிரிவில் வெண்கலத்துக்கான மோதலில் மங்கோலியாவின் பேட் எர்டென்பாதரை வீழ்த்தினார்.
 எனினும், 92 கிலோ பிரிவில் இந்தியரான சோம்வீர் சிங் 2-3 என்ற கணக்கில் ஜப்பானின் டகுமா ஒட்சுவிடம் வீழ்ந்து பதக்கச் சுற்று வாய்ப்பை இழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com