ஹால் ஆஃப் ஃபேம்: இறுதியில் ராம்குமார்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஹால் ஆஃப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஹால் ஆஃப் ஃபேம்: இறுதியில் ராம்குமார்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஹால் ஆஃப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஏடிபி உலக டூர் போட்டிகளில் ராம்குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும்.
 ராம்குமார் தனது அரையிறுதியில் அமெரிக்காவின் டிம் ஸ்மைசெக்கை 6-4, 7-5 என்ற செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து, ஏடிபி உலக டூர் ஒற்றையர் பிரிவில் கடந்த 7 ஆண்டுகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
 இறுதிச்சுற்றில் ராம்குமார், மற்றொரு அமெரிக்கரும், போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருப்பவருமான ஸ்டீவ் ஜான்சனை சந்திக்கிறார்.
 உலகின் 161-ஆம் நிலையில் இருக்கும் ராம்குமார், இந்தப் போட்டியில் இறுதிச்சுற்று வரையிலான ஆட்டத்தில் ஒரே ஒரு செட்டை மட்டுமே இழந்துள்ளார். இப்போட்டியில் அவர் பட்டம் வெல்லும் பட்சத்தில், கடந்த 20 ஆண்டுகளில் ஏடிபி டூர் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
 முன்னதாக, கடந்த 1998-ஆம் ஆண்டு லியாண்டர் பயஸ் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார். அதேபோல், கடைசியாக இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியிருந்தார். அதில் அவர் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனிடம் வீழ்ந்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com