செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் ஆடவர் அணிகள் இறுதிச்சுற்றில் வியாழக்கிழமை மோதுகின்றன.
 உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-இன் சிறந்த கோலாக, நாக் வுட் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக பிரான்ஸ் வீரர் பெஞ்ஜமின் பவார்ட் அடித்த கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 உள்நாட்டு கிரிக்கெட்டில், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி அட்டவணையை மாற்ற பிசிசிஐயிடம் கேரள கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 2009 ஐபிஎல் போட்டியின்போது அந்நியச் செலாவணி மோசடிச் சட்டத்தை மீறியதாக பிசிசிஐ முன்னாள் பொருளாளர் பாண்டோவுக்கு அமலாக்க இயக்குநரகம் விதித்துள்ள ரூ.9.72 கோடி அபராதத்தை செலுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து விளையாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீன அணிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
 அமெரிக்க ஊக்கமருந்து சோதனை அதிகாரிகள் தன்னை பாரபட்சத்துடன் நடத்துவதாகவும், இதர வீரர், வீராங்கனைகளைக் காட்டிலும் தாம் அதிகமுறை சோதிக்கப்படுவதாகவும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
 ரஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் செளரவ் வர்மா, ரிதுபர்னா தாஸ் உள்ளிட்ட 6 இந்தியர்கள் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com