தோனி, சேவாக்கின் திறமைகளை மெருகேற்றியது எப்படி?: கங்குலி வெளிப்படுத்தும் சுவையான அனுபவங்கள்!

சேவாக், நடுவரிசையில் ஆடியிருந்தால் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.
தோனி, சேவாக்கின் திறமைகளை மெருகேற்றியது எப்படி?: கங்குலி வெளிப்படுத்தும் சுவையான அனுபவங்கள்!

சேவாக், நடுவரிசையில் ஆடியிருந்தால் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.

தோனி, சேவாக்கை தான் பயன்படுத்திக் கொண்டது பற்றி ஒரு பேட்டியில் கங்குலி கூறியதாவது:

வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் சேவாக்கை என்ன செய்யப்போகிறீர்கள்? பவுன்சர் வீசி அவரை அவுட் செய்துவிடுவார்கள், பவுன்சர்களால் தலையைத் தாக்குவார்கள் என்று சிலர் பயமுறுத்தினார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், வெளிநாடுகளில் அவர் எப்படி விளையாடுவார் என்று அறிந்துகொள்ளாமலேயே, அவருக்கு ஒரு வாய்ப்பு தராமலேயே நீங்கள் அவர் மீது விமரிசனம் வைக்கிறீர்கள் என்றேன். தென் ஆப்பிரிக்காவில் தனது முதல் ஆட்டத்திலேயே சதமெடுத்தார் சேவாக். 

ஹேடன், லேங்கரால் தொடக்க வீரராக முடியும் என்றால் உங்களாலும் முடியும் என்று ஒருநாள் சேவாக்கிடம் சொன்னேன். ஏனெனில் அவருக்கு நடுவரிசையில் இடம் கொடுக்க முடியாமல் இருந்தேன். ஆனால், தான் தில்லி அணிக்காகக்கூட தொடக்க வீரராக ஆடியதில்லை என்றார் சேவாக். ஆனால், இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடிய அவர், சதமெடுத்தார். 

நான் அவரை நடுவரிசையில் ஆடவைக்கவில்லை என்பார். நடுவரிசையில் ஆடியிருந்தால் உங்களால் ஆட்டத்தில் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது, இந்தளவுக்குத் திறமையை வெளிப்படுத்தியிருக்க முடியாது என்பேன். 

2004-ல் தோனி அணிக்குள் நுழைந்தபோது அவர் 7-ம் நிலையில் முதல் இரு ஆட்டங்களில் ஆடினார். விசாகப்பட்டணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை எப்படிப் பயன்படுத்துவது என யோசித்தேன்.என்ன ஆனாலும் சரி, முன்வரிசையில் களமிறக்க முடிவெடுத்தேன். ஆட்டத்தின்போது 7-வதாகக் களமிறங்குவதால் ஷார்ட்ஸில் இருந்தார் தோனி. மூன்றாம் நிலையில் இறங்கி விளையாடவும். நான் நான்காவதாகக் களமிறங்குவேன் என்றேன். அன்று அவர் 148 ரன்கள் எடுத்தார். இப்படித்தான் சிறந்த வீரர்கள் உருவாவார்கள். 

தோனி, கிழக்குப் பகுதியிலிருந்து வந்தவர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அங்கிருந்து வீரர்களின் வருகை அரிதாக இருக்கும்போது, நாங்கள் இருவருமே கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com