இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு!

இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது...
இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி நியூஸிலாந்துக்குச் செல்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 23 அன்று தொடங்கி, பிப்ரவரி 3 அன்று முடிவடைகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 6 அன்று தொடங்கி பிப்ரவரி 10 அன்று முடிவடைகிறது.

இந்திய மகளிர் அணியும் நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. ஜனவரி 24 அன்று ஒருநாள் தொடருடன் தொடங்கும் சுற்றுப்பயணம், பிப்ரவரி 10 அன்று டி20 தொடருடன் முடிவடைகிறது. 

இந்தியா - நியூஸிலாந்து தொடர் அட்டவணை

Jan 23: முதல் ஒருநாள், நேபியர் 
Jan 26: 2-வது ஒருநாள், பே ஓவல் 
Jan 28: 3-வது ஒருநாள், பே ஓவல் 
Jan 31: 4-வது ஒருநாள், ஹேமில்டன் 
Feb 3: 5-வது ஒருநாள், வெல்லிங்டன் 
Feb 6: முதல் டி20, வெலில்லிங்டன் 
Feb 8: 2-வது டி20, ஈடன் பார்க் 
Feb 10: 3-வது டி20, செடன் பார்க்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com